உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

சனி, 31 டிசம்பர், 2016

பிறப்பின் நூல்


*

திரும்பமுடியா இடம்
திரும்பிப் பார்க்கமுடிகிற இன்னொரு பிறப்பு


ஒற்றை வார்த்தைகளின்
இரட்டைப் பிறப்பு
அச்சு அசலின் வேறு வேறு நிமிடங்கள்


நாம் திணறுகிற நெருக்கடி
அத்தனை விசாலம்
அவ்வளவு சுதந்திரம்


இரண்டு அர்த்தத்தில் ஒளிந்துள்ள
ஒற்றை நூலிழை
நாம் திரும்பிச் செல்கிற தூரத்தின் தொலைவு


தொலைகிறோம்
ஒவ்வொரு நூலிழையிலும்
நூலறுந்த பட்டத்தின் தவிப்புடன்.


-ரேவா

0 கருத்துகள்: