காட்டுப் பாதையின் வனப்பாய் இருக்கிறது
இந்த மெளனம்
தொலைவதற்கான குறிப்புகளை
டிரட் மில்லின் வேகத்தில் தயார்செய்கிறது
நிதானம்
கையெட்டும் காரணம்
கூட்டும் வேகத்தில் தொலைகிறது
தொலையாதென நினைத்தது
இந்த மெளனம்
தொலைவதற்கான குறிப்புகளை
டிரட் மில்லின் வேகத்தில் தயார்செய்கிறது
நிதானம்
கையெட்டும் காரணம்
கூட்டும் வேகத்தில் தொலைகிறது
தொலையாதென நினைத்தது
நிமிடங்களின் மூச்சிரைப்பில்
நிற்கிற இடம்
ஓர் ஒற்றையடிப் பாதை
திரும்புதல்
காட்டின் விதை
-ரேவா
நிற்கிற இடம்
ஓர் ஒற்றையடிப் பாதை
திரும்புதல்
காட்டின் விதை
-ரேவா
0 கருத்துகள்:
கருத்துரையிடுக