உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

வெள்ளி, 30 டிசம்பர், 2016

பிடித்த பாடல்கள்


*

நம் கடந்த காலங்களை பிரதியெடுக்கிற சர்வ வல்லமை நிகழ்காலங்களோடு ஒட்டிக்கொள்கிற மனிதக்கூரைகளிடம் உண்டு தான்..
எங்கோ, யாரோ, எதன் பொருட்டோ மறப்பதென்ற நினைவில் தேக்கி் வைத்துக் கொள்கிற முரணை, சம்பவங்களின் அடர்த்திக்குள் இழுத்துவந்துவிடும் போது மனதிற்குள் நிகழ்கிற வெட்கை பொழுதை, வியர்த்தது வெளியில் தெரியாத அளவு துடைத்திடத் தெரிந்திடும் பக்குவம் ஒரு பெரும் பயிற்சி..

பெரும்பாலும் பயிற்சி அத்தனையும் ஒரு வதைக்கூடமென்ற எண்ணத்தோன்றுகிறது. 

ஒளிந்துகொள்வதற்கோ அல்லது நம்மை புதுப்பித்துக்கொள்வதற்கோ நம்மால் ஆரம்பிக்கப்படுகிற எதுவும் பழையதைப் போல் இருக்கக்கூடாதென்ற நினைப்பில் தொற்றிக்கொள்ளும் பழையதின் ஒரு புதுப்பித்து.
புதியதும், பழையதைப் போல் ஒரு நிறமென்பது நம் நிறமாற்றங்களின் வெளிச்சப்பொழுதுகள் நமக்கு விரித்துக்கொடுத்துவிடும், நிழல் நம் வெயிலின் விருந்து..

கூரைகள் மாறுகிற போதும், நிலம் தன்னைத் தனதாக்கி வைத்துக்கொள்வது தான் இந்த வாழ்தலில் காட்டுச் சுவை இருக்கிறதென்று உணர்கிறேன்..
காட்டுச் சுவை ஓர் இரவின் மகரந்தக் காதுகள்..
போதும் போதுமென்ற ஓட்டங்களுக்கு மத்தியில்
காலையிலிருந்து இந்த பாடல் இசைத்துக்கொண்டே இருக்கிறது.. 


Mounam chorum neram
Kannil thedi njaan
Nin sneham thennum nokkaal
Nenchil peyyum
Neeye…

Mizhiyaake thedum kaavyam neeyaane
Meettum viralukalennum njaanaane
Kaathaake kelkkum paattil neeyaane
Moolum chundukalinnum njaanaane


0 கருத்துகள்: