*
கனவிற்குள் நுழைவதைப் போல்
எளிதாவது இல்லை
கடந்ததில் நுழைவது
ஊர் சுற்றிப் பார்க்கக் கிளம்பும் பையில்
திணிக்கப்பட்டவைகள்
உறங்கிப் போன நடுசாம வீதிகள்
நிழலின் பயம்
நடப்பதின் வெளிச்சம்
எங்கிருந்தோ அனத்துகிற இறந்த காலத்தின்
சாவிகள்
எவர்கையிலேனும் இருக்கலாம்
அனுமதியற்ற வாசல்
திறந்தே கிடக்கிறது
இப்போது
வருகையென்பது இறந்தகாலமா எதிர்காலமா?
-ரேவா
0 கருத்துகள்:
கருத்துரையிடுக