காலம் நின்று விடுகிறது, நாம் பார்க்க ஆசைப்பட்ட என்ற வார்த்தைக்கு பின்னிருக்கும் காட்சிகளின் மத்தியில்..
ஒவ்வொரு கூடுடையும் நம்பிக்கைக்குப் பின்னும் பறக்க அனுமதித்த வானத்தின் கருணை?! கற்றுக்கொண்டதின் சுதந்திரம். அல்லது சிறகுகளின் கற்றல்.
நரைகூடும் பருவமென்பதில் வளர்ந்துவிடும் பால்பற்கள் உச்சரிப்பதற்காக வாங்கிக்கொண்ட இன்னொரு வரம். அது வளரும்.. பின் விழுமென்பது பிள்ளை வயது பாடம்.

நாமே தான் வடிவமைக்கிறோம்
என்ற புரிதலுக்கு வரும் போது வந்து நிற்கிற நிறுத்தம் அனுமதிப்பதில்லை
வயதையும், வாழ்க்கையையும். ஆனாலும் இருக்கும் வரைக்கான ஒவ்வொரு
ப்ரயத்தனமும் இருந்து பார்ப்பதற்கான புதிய பிறப்பு என்ற கூக்குரல்
பிறக்கும் போது நாம் பார்க்க ஆசைப்பட்ட என்ற சொல் பறந்துவிடுகிறது ஆளற்ற
வனத்தை நோக்கி..
ஒரு சொல்லின் வனம் நாம் என்றும் நடந்துபார்ப்பதற்கான புதிய பாதை. அது அனுமதிக்கிறது எத்திசையிலிருந்து எத்திசையையும்..

0 கருத்துகள்:
கருத்துரையிடுக