*
எதற்கு இத்தனை நடிப்பு
சொற்களின் வரிசையைக் கொஞ்சம் ஓரங்கட்டு
கால் கடுக்க நின்று வந்த என் மெளனத்தை ஏற்றுக்கொள்
பிராகரம் சுற்றிவந்த களைப்பு
கோவில் சிலையென ஒட்டிக்கொண்டு நிற்கிறது
பரிகாரம் தேடாத பாவங்களை
மன்னி
அவை அசலானவை
பாவமென்பது வழக்கொழிந்துவிட்ட
சத்தங்கள்
தேங்காய் உடைக்க சன்னிதியில்
ஓர் இடமுண்டு
சத்தம் வெடிக்கும் போது கிளம்புகிற
விசும்பல்
உன் உப்புச் சுவை
உப்பென்பது நீ கொடுத்த முன்நெற்றி முத்தம்
ஷ்ஷ்ஷ் சத்தமிடாதே
இதற்குத் தானா இத்தனை நடிப்பு
-ரேவா
எதற்கு இத்தனை நடிப்பு
சொற்களின் வரிசையைக் கொஞ்சம் ஓரங்கட்டு
கால் கடுக்க நின்று வந்த என் மெளனத்தை ஏற்றுக்கொள்
பிராகரம் சுற்றிவந்த களைப்பு
கோவில் சிலையென ஒட்டிக்கொண்டு நிற்கிறது
பரிகாரம் தேடாத பாவங்களை
மன்னி
அவை அசலானவை
பாவமென்பது வழக்கொழிந்துவிட்ட
சத்தங்கள்
தேங்காய் உடைக்க சன்னிதியில்
ஓர் இடமுண்டு
சத்தம் வெடிக்கும் போது கிளம்புகிற
விசும்பல்
உன் உப்புச் சுவை
உப்பென்பது நீ கொடுத்த முன்நெற்றி முத்தம்
ஷ்ஷ்ஷ் சத்தமிடாதே
இதற்குத் தானா இத்தனை நடிப்பு
-ரேவா
0 கருத்துகள்:
கருத்துரையிடுக