உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

வெள்ளி, 30 டிசம்பர், 2016

வாட்ஸ் அப் (தமிழாக்கம் செய்யவும்)

*
கையிருப்பு பூஜ்ஜியத்தைக் காட்டுகிறது 

தொடங்கும் போது இருக்கும் ஒன்று
சேமிப்பில் தொலைவதை
பிழையெனக் காட்டி நகுகிறது
கை எழுத்து

பிரதிவாதியாக மாறிவிட்ட
பாஸ்போட் சைஸ் குறிப்புகள்
சாயம் போகத் தொடங்கிவிட்ட நாளில்
புன்னகையை ஏந்தி வருகிற
கிரெடிட் கார்டுக்கான டெலிக்காலிங் தேவதைகளுக்கு
சிறகு வளரத்தொடங்கிய வனம்
சொல்லின் வானத்தில் பறக்கிறதை
புகைப்படமெடுக்கிறான் யுவதி ஒருவன்

வாட்ஸ் அப்பில் வைரலாகிப் பரவும் வனாந்திரத்தின் வானம் குறித்து
சேனலுக்கு சேனல் பேட்டிகள் கொடுக்கிறவர்கள்
செந்நிற மனிதர்களைப் போல் தோற்றமளிப்பதாய்
பேஸ்புக் முழுதும் நையாண்டிக் கமெண்டுகள்
விழுந்து சிதறுவதில் விடியல் தொலைகிறது 

அறிவின் பசிக்கு கையிரண்டை ஒப்புக்கொடுத்தப் பின்
வயதின் பசிகுறித்து யோசிக்க
திறந்திருக்கிற பச்சை விளக்கு போதுமானது

எச்சரிக்கை
எண்களுடைய மனிதர்களைப் புறக்கணிக்கும் ஆணை
என்னிலிருந்து தொடங்குகிறது.

-ரேவா

முன்னெச்சரிக்கை
தேதி 23.02.16
இரவு 8.59
மஞ்சள் புன்னகை

0 கருத்துகள்: