உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

வெள்ளி, 30 டிசம்பர், 2016

பொம்மைப் பொழுதுகள்


*
டெடிபியரின் நேசத்திற்கு இணையாய்
என் எளிய நேர்மையை உனக்குப் பரிசளிக்கிறேன் 

காதுகளற்றுக் கேட்கும்
கண்களற்றுப் பார்க்கும்
வாயைப் பொத்திப் பேசும்
அதனிடம்
எப்போதும் ரகசியமற்று இரு

வேண்டுவதெல்லாம்
வேண்டும் வரைக்கான செவிகள் மட்டும் தான்
செவியெனும் மடி கொடு

-ரேவா

0 கருத்துகள்: