உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

வெள்ளி, 30 டிசம்பர், 2016

வெளிச்சப் பிரிவின் இருள் கணங்கள்


*

இருள் போர்த்திக்கொள்ள போதுமானதாய் இருக்கிறது
பிரிவு

கதகதப்பைத் தேடும் நினைவுகள்
விட்டில் பூச்சிகள்

விளக்காவதில்லை என்றபோதும்
வெளிச்சங்கள் ஆட்டிவைக்கின்றன
பொம்மலாட்டக் கைகளென
பிரிவை
அதன் இருளை..



-ரேவா

0 கருத்துகள்: