நிறமாற்றம் கொண்டுவிட்ட காலத்தின் முன்
நீரின் பெயர் நெருப்பால் எழுதப்படுகிறது
நீ இருக்கிறாய்
நீரின் பெயரைப் போல்
உச்சரிப்பதின் வெயில் குடிக்கிற
பருவத்தின் முன்
பாலை மணலில் நெளிகிற சர்ப்பத்தின் அழகை
கற்றாழைச் செடியின் விரிந்த கண்களாக்குகிறது
சொல்லின் நீர்மை
அங்கே
விரிகிற தோகை மழைக்கானது என்பதை
அறிவிக்கிற மாற்றங்கள்
வானிநிலை மாற்றத்தைப் போல் நிலையில்லாதது
மாற்றத்தைப் போல் நிலையானது
என்பதை
செந்நிற மழை உறுதிபடுத்துகிறது
நீ இருப்பாய்
நெருப்பின் பெயரால்
- ரேவா
0 கருத்துகள்:
கருத்துரையிடுக