உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

சனி, 31 டிசம்பர், 2016

மே பைட்ஸ்

1.

தொலைவுகளில் இருக்கிறது
இழந்ததின் அருகாமை


2.

பிரிவை உடுத்திப் பார்க்கிறோம்
அளவுகளுக்கேற்ற கச்சிதம்
அவரவர் வசதி.


3.

நமக்கே நமக்கென்று வாய்ப்பது
தனிமையே என்றாலும் அது நமக்கானது


4.

நிரந்தரச் சொற்களைத் திறந்துவிடுவதன் மூலம்
விடுதலையடைகின்றன கூண்டுப் பறவைகள்


5.

நிலாக் காட்டில்
நீர் அருந்துகிற யானையின் கண்ணில்
பசித்த நினைவு


6.

நெடுஞ்சாலை பிரியமொன்றின் கையசைப்பு
கடத்தி வந்துவிடுகிறது
பயணத்தை புறப்பட்ட திசையிலிருந்து
வேறொன்றிற்கு..


7.

ஆளற்ற இரவில்
பறவையின் சிறகசைப்பு பருகித் தீர்க்கிறது
இந்த கோடைக்கான முதல் சொல்லை




 

0 கருத்துகள்: