உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

வெள்ளி, 30 டிசம்பர், 2016

மனதிற்கு பிடித்த பாடல்


எல்லா வியாக்கியனாங்களையும் அடித்து நொறுக்கிவிட்டு நம்மை மீண்டும் புணரமைக்கிற சக்தி அன்பின் இசைக்கு இருக்கவே செய்கிறது.
சில நேரங்கள், சில பாடல்கள் திருப்பி நினைக்கவோ கேட்கவோ துணியாத சூழலை அல்லது அதுக்கு ஆட்படும் மனதை அப்படியே அனுபவிப்பது என்பது தவம் அதை மீறுதல் ஒரு வரம் :) ..


தனிமைக்குள் நுழைந்திடும் ஒரு குட்டி வானத்தின் ஆறுதலைப் போல், அதில் கூடும் மேகத்தின் பொழிதல் கணங்கள் வெறிக்கத் தொடங்கியும், கையளவே ஆன எதிர்பார்ப்பே கடத்திவந்திருக்கிறது காயம் பட்ட அனைத்தையும்.
மீண்டும் மீண்டுமென்ற தொடர் சுழிக்குள் அகப்படுவதென்வோ ஆழத்தின் தெளிவற்ற தெளிவு தான் என்று குழம்பித் தெளியப் பிரியப்படுகிற மனதிற்கு மருந்திடுவதும் அன்பின் இசையாகவே இருந்திருக்கிறது.

பெங்களூர் டேஸ் 2015 லிருந்து சமீபங்களை முழுவதுமாகவே என்னை ஆக்கிரமித்திருக்கும் படம். காதல் என்ற ஒற்றைச் சொல்லுக்குள் இருக்கும் வித விதமான வண்ணங்களில் நாமே கரைந்து போய் மழைக்கான தருணங்களை மனதிற்குள் இழுத்து வரும் மயில் தோகை இந்த காதல்..
காதல் 

இந்த ஒற்றைச் சொல்லைக் கடந்திடாத மனதின் பால்யம் பால்யமே இல்லை தானோ?

(சிரிக்கிறேன்)

கதையில் மொத்தமாய் ஒரு ஐந்து காதல்.. மனிதற்று இன்னொரு காதல்..
பெண்ணோ ஆணோ ஏங்கியவரே கண்டடைவார் என்று எப்போதோ எங்கையோ படித்தது அறிவை திரையிடுகிறது. மனம் வெளிச்சம் கேட்கிறது..
மனம் ( அறிவற்று மனமென்பது எத்தனை பெரிய பொய்)
பசிக்கு தேடுவதும், பசியை அனுபவிப்பதும் வேறு வேறான பக்குவம். அந்த பக்குவங்களில் உடலோடு அறிவின் மனதையும் ஏற்றிவிடும்போது உணர்வுகளைக் கையாள்வது இரட்டை மாடுகள் பூட்டிய வண்டியைப் போல் தான் எண்ணத் தோன்றுகிறது..

பிசகுதலும், பிடிதளர்த்தாது பயணப்படுவதும் அவரவர் எண்ணத்தின் புஜபலம்.
மொழிபெயர்ப்பு என்பது ஒரு சிக்கல் காடு தான். கைதேர்ந்தவர்களே நமக்கான வழிகளை வடிவமைக்கிறார். 

பெங்களூர் நாட்கள் இன்றுவரை பார்க்கவே கூடாதென்று மனதிற்குள் கங்கனம் கட்டாத குறை தான்.. 22 female kottayam படம் தமிழிலில் வந்ததின் தாக்கமாய் கூட இருக்கலாம் ;)
மொழியறியாது உணர்வுகள் புரிந்திடும் போது வார்த்தைகள் தேடாத நிறைவு ஒரு மயக்கநிலை

அந்த வகையில் 

Ente kannil ninakkai orukiya swapnangal
Kanenda nee kandu nilkenda nee
Aaranu nee enikkinnaarodum
Chollenda nee kadha parayenda nee
Thammil thammil moolum paatukelkenda nee
Koode paadenda nee koode aadenda nee
என் விழியின் கனவு
உன் சொந்தம் இல்லை
நீ காணாதே-அதில்
பிழை தேடாதே
என் சிறிய உலகில்
நீ யாரும் இல்லை
ஏன் கேட்காதே -அதில்
அடிவைக்காதே
என்னுள் நானாய் பாடும்
பாடல் ஒட்டுக் கேட்பதேன்
நெஞ்சில் முணுமுணுப்பதேன்
என் வாழ்வை வாழ்வதேன்
எந்தன் பசி
எந்தன் தாகம் கூட
உனைக் கேட்டு வரவேண்டுமா
நீ எந்தன் சுவாசமா?
இந்த மலையாளப் பாடல் அத்தனைப் பிடிக்கும். இதன் தமிழ் பாடலோடு தான் இன்றைய பல பொழுதுகள் கிழக்கில் இருந்து மேற்காகவும், மேற்கிலிருந்து கிழக்காவும் மாறி மாறி விடிகிறது..

https://www.youtube.com/watch?v=MTEOGLEPWpk
https://www.youtube.com/watch?v=FJUYcXNznb8
அன்பைக் கொண்டாடத் தெரிந்த அனைவருக்கும் வாழ்த்துகள்
:)
-ரேவா

0 கருத்துகள்: