உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

வெள்ளி, 30 டிசம்பர், 2016

நிதானத்தின் கடல் நிறுத்தம்


*

விட்டுவிட்டுப் போன சொற்களின் படகு
நீந்திக்கொண்டிருக்கிறது

மிக நிதானமாக
நிதானத்தின் மிகமாக


திருப்பிப் போட்டவுடன் மாறிக்கொள்கிற 
அர்த்தங்களைப் போல
ஆழங்கள் குறித்த கவலையற்ற துடுப்புகள்
கரை சேர
படகுகள் எப்போதும் கடல் நோக்கியே
நிறுத்தப்படுகிறது


-ரேவா




0 கருத்துகள்: