உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

வெள்ளி, 30 டிசம்பர், 2016

சுழற்சியின் நிறம்



வீடறியாதவனின் ஞாபக மறதியாய்
அத்தனை பாந்தமாய் நடக்கிறது
சந்திப்புகள் நமக்குள்


கைவிடப்பட்ட கைக்குட்டையொன்றை
துடைக்கக் கொடுத்த நாளில்
உப்புப் படிந்த கண்ணீரின் உதிரம்
விலக்கு நாள் அவஸ்தை


மரணபயம் கொடுத்திடாத விலகுதலால்
வலியேற்படுவதில்லை
முன்போல்


நெற்றி முத்தமொன்றின் பாலை
சுட்டெரிக்கிறது
கடல் பார்த்த நாளின் ஞாபகத்தை


கரை(றை) தெரியாமலே போகட்டும்

பஞ்சின் அவஸ்தை
நெருப்பு எப்படி அறியும்


-ரேவா
நன்றி
கணையாழி
(பிப்ரவரி 2016)

(இந்த வருடம் கணையாழியிலிருந்து தொடங்கியிருக்கிறது)


0 கருத்துகள்: