*
பக்கத்தில் இருக்கிறோம்
நிச்சயமற்ற தன்மைக்கு பாதுகாப்பாக
தொலைவு என்பது
6 அடிக்கு முன்னும் பின்னுமான உயரம்
உட்காரும் போது நிலைகொள்ளும் அமைதியை
எழுந்துகொள்ளும் காலடி ஓசைக்குள்
தொலைக்கிறோம்
நடப்பதென்பது அணிந்துரையற்ற தொகுப்பு
நிறைந்திருக்கிற பக்கங்கள் நீங்கலாக
நாம் புரட்டிக்கொள்கிறோம்
-ரேவா
0 கருத்துகள்:
கருத்துரையிடுக