உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

சனி, 31 டிசம்பர், 2016

இருவழிச்சாலையின் ஒற்றை மைல்கல்


*

இடை நிறுத்தப்படும் காலத்தின் அறைச்சுவர் மேல்
வண்ணங்கள் ஏறுவதில்லை

பூசி நிற்கும் சொற்பமும் வெளிப்புழங்கும் அனலால்
பெயர்ந்து உதிர்கிறது
மிச்ச ஈரமாக


விலகுதல்
விடுபடுதல்
இரண்டிற்குமான ஏக்கத்தில்
இரவு ஏறி பகல் வருகிறது


பயணப்படும் தூரமென்பது
ஒரு நாளுக்குரிய மணி நேரமாகையில்
கிழிக்கப்படும் தேதியின் கருணை
முந்தைய நினைவின் குடைக் காளான்


இருப்பை பூஞ்சைகளாக்கிடும் மழையால்
ஈரமடிக்கத் தொடங்கும் சுவர்கள்
பலகீனமடைகின்றன
வெளிப்பூச்சிற்கு அவசியமற்று..



-ரேவா

1 கருத்துகள்:

'பரிவை' சே.குமார் சொன்னது…

இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்...