சிரித்தபடி இருக்கும் லாஃபிங்க் புத்தனின் மோனநிலை வாய்க்கா பொழுதொன்றில் சிவப்பு நிறப் பென்சிலின் கூர்முனை கரையும் வரை வரைந்து பார்த்த புன்னகையில் போதிமரம் வேர் பிடித்திருந்தது புத்தனின் வாசத்தோடு
அனுமதித்தலின் பொருட்டு வந்து விழுந்துவிட்ட வாழ்வின் மிகச் சொற்பமான காலத்தில், கையளவே கிடைத்த எனக்கே எனக்கான தனிமையை, நான் சொற்கள் கொண்டு நெய்கிற வனம் இந்த எழுத்து.
தொலைதலோ, கண்டெடுத்தலோ எதாவது சாத்தியப்படுமென்ற முயற்சியில் நான் பெற்றதும், பெறத்துடிப்பதை அடைய முயற்சிக்கும் சிறிய போராட்டமும், இந்த சின்னஞ்சிறிய வாழ்வை என்ன செய்கிறது என்ற சுயபரிசோதனைக்கு என்னை நான் உட்படுத்தியிருக்கிற இந்த இடம் எனக்கு பிரதானம்..
0 கருத்துகள்:
கருத்துரையிடுக