உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

திங்கள், 11 மே, 2015

வெயில் பூவின் அந்தி




கடைசி வார்த்தையிலிருந்து கிளம்பிவிட்டாய்
வெயில் பூக்கும் திசை நோக்கி

பார்வையின் குளிர்காலப் பொழுதுகள்
கொடியில் காயும் உடுப்புகளாய் நமத்துப் போய் கிடக்கையில்
அதை மடிக்கும் நிர்பந்தத்தின் சூழலுக்குள்
பெரும் பாலை

வெகுதூரம் வந்துவிட்ட மனக்கால்கள்
உணர்வுக்கு அனுப்பும் செய்தி
வெடிப்பென கிளம்பி
கானல் வழித்தடத்தை மாற்றிட

கருணை பழகிய ஈச்சை நிழலிருந்து
உடுப்புக்களை உலர வைத்து
வடக்கு நோக்கி அடுக்கினேன்

உன் வெயில் பூ
அந்திக்குள் நுழைந்த நிம்மதியில்

-ரேவா

0 கருத்துகள்: