உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

திங்கள், 11 மே, 2015

உதட்டுச் சாயங்களை உடுத்தியிருக்கும் பெட்ரோலியம் ஜெல்லின் நஞ்சு


*
ஒரு கோமாளியைப் போல நிறமாற்றம் கொண்டுவிடும்
 நேரங்களைக் கணக்கு வைப்பதாயில்லை

கூட்டல் கழித்தல்கள் அடித்துத் திருத்தும்
பெருக்கல் விதியை
வகுப்பதால் வந்துவிட்ட கணக்கின் விகிதம்
சராசரிக்கு பொருந்தவும் இல்லை


என்னிடம் வராதே
திரும்பிச் செல்லென்று சொல்லும்

எந்தவொரு கேள்விக்கும் முறையிடுவதுமில்லை

முறைவாசலற்ற சந்தர்ப்பங்கள்
ஒழித்துக்கட்டும் போக்கிடமற்ற சம்மந்தங்களை
அடி நாக்கில் திணிக்கும் போதையென மயங்கிச் சுருட்டுகிறது
பரீட்சையமற்ற உனது மொழியை


தெரிந்த மொழிக்குள் தெரியாத தீவு
நான் திரிகிறேன்
எரிகிறேன்
மலைமேலே தவழ்கிறேன்


வெயில் ஒரே வெயில்
சுடுகிறது மழை
எரிகிறது பனி
கரைக்கிறது இருள்


வராதே
நீ வராதே

நேசித்துச் சாவ
இன்னொரு முறை நான் தயாராய் இல்லை


-ரேவா

painting :Steve

0 கருத்துகள்: