தொடுதிரையில் மிளிரும் பெயர்
யாவற்றையும் அசைத்துப் பார்க்கிறது
முடிந்ததென்ற அபத்தத்தைத் தொடர்ந்து
நாடி பிடித்துப் பார்க்கும் மருத்துவனின்
அடங்காத் துடிப்பைப் போல்
அது
ஒரு தொடக்கம்
விருப்பமில்லாது எடுத்துப் பேசும் நிமிடங்கள்
அழையா விருந்தாளியாய் போன
வீட்டின் தவிப்பு
சொற்ப நேரமே என்றாலும்
வார்த்தை வெப்பத்தில் மூர்ச்சையாகி
மயங்கிக் கிடக்கும் மனதில்
கனவு கலைந்து புகைவது
நிச்சயம்
புகை
மேகமாகி
மழையாய் பொழியாது கலைத்துவிடும் காற்றில்
கரைந்து போகிறது
எதார்த்தமெனும் பெயரில் எல்லாமும்
-ரேவா
0 கருத்துகள்:
கருத்துரையிடுக