விதை பிடித்த நாளொன்றிலிருந்து
கொஞ்சம் கொஞ்சமாய் வேர் விட்டெழுகிறது
பிரியத்தின் ஊதாச் செடி
விழிக்கும் பொழுதில்
தெளிக்கும் நீர்
உயிர் வளர்த்துச் செடியினை எழுப்ப
உச்சிப் பொழுதில்
உறிஞ்சும் மட்டும் ஈரம் சேமிக்கும்
தண்டினை மீறி
உதிரும் ஒன்றிரண்டு இலைகளின் வீழ்தலில்
நுழைந்து வழிகிற காலத்தினுள்
மொட்டவிழ வெடிக்கும் சத்தம்
மலர்தலுக்குத் தான்
-ரேவா
0 கருத்துகள்:
கருத்துரையிடுக