என்னுள்ளே நிரம்பித் ததும்பும்
உன் பொன் மஞ்சளை
அறைச் சுவரெங்கும் வரைந்து
அருகில் அமர்ந்து கொண்டது அந்தியின் அணுக்கம்
ஒரு பாடல் சுவர் கிழித்துக் கேட்க ஆரம்பிக்கையில்
இன்னும் இணக்கமாகிறாய்
இளஞ்சூட்டின்
இலக்கணமற்ற புதுக்கவிதைக்கு தயாராகும்
வெள்ளைக் காகிதத்தின் முனை உடையும் வரை
எழுதிவிட்டு வீசியெறிகிறாய்
மஞ்சள் பூசிய அறை விடியலின் நிறம் ஏற்க
மறுபடியும் அந்திக்குள் போகிறேன்
லயம் தப்பி
-ரேவா
0 கருத்துகள்:
கருத்துரையிடுக