மழை உலர்த்த வந்த வெயில்
சன்னமாய் தூவி வைத்திருக்கும்
ஒளிக்கீற்றில்
வெளிச்ச நடனமொன்றை
அரங்கேற்றி வைக்கிறது மரக்கிளை
கிளை நுனி சூடியிருக்கும்
மூக்குத்தியில்
ஊடுருவும் மஞ்சள்
நாலாபுறமும் அதன் வர்ணம் வளர்க்க
மழை சிந்திய துளியொன்றை
குடித்து வளர்கிறது
கிழக்கு.
-ரேவா
சன்னமாய் தூவி வைத்திருக்கும்
ஒளிக்கீற்றில்
வெளிச்ச நடனமொன்றை
அரங்கேற்றி வைக்கிறது மரக்கிளை
கிளை நுனி சூடியிருக்கும்
மூக்குத்தியில்
ஊடுருவும் மஞ்சள்
நாலாபுறமும் அதன் வர்ணம் வளர்க்க
மழை சிந்திய துளியொன்றை
குடித்து வளர்கிறது
கிழக்கு.
-ரேவா
0 கருத்துகள்:
கருத்துரையிடுக