துளி ஈரம் மிச்சமிருக்கையிலே
அதை விட்டிருக்கலாம்
முடியும் வரை உறிஞ்சியெடுத்துவிட்ட பின்
உலர்வுகள்
பிளந்த உதடுகளை
வெடிப்புகளாய் விரித்துக்காட்டியும்
பருகுதல்
கானல்
இருந்தும் துரத்துகின்றாய்
கைக்கெட்டா தூரத்தில் தெரிந்திடும் வார்த்தைக்காய்
போராடிப் பார்க்கும் நிலம்
மீண்டும்
மழை வேண்டி தவமிருக்கும்
நீ
மட்டும் பொழியாதிரு
உன் மாமழையை
-ரேவா
Painting : Michaela
கைக்கெட்டா தூரத்தில் தெரிந்திடும் வார்த்தைக்காய்
போராடிப் பார்க்கும் நிலம்
மீண்டும்
மழை வேண்டி தவமிருக்கும்
நீ
மட்டும் பொழியாதிரு
உன் மாமழையை
-ரேவா
Painting : Michaela
0 கருத்துகள்:
கருத்துரையிடுக