கிளம்பி விடுதல்
குறித்தான யோசனைகளை
நீயுரான்கள் சேமிக்கத் தொடங்கிவிட்டன
மடிப்புகளில் உட்கார்ந்திருக்கும்
கலையா நிகழ்வுகளை
உதிறியெடுத்து ஓரங்கட்ட
நினைவுப் பெட்டியொன்றை
தயார் செய்கிறேன்
அடுக்க அடுக்க
அந்தரத்தில் ஏறிக்கொள்ளும்
உரையாடல்களின் பிம்பத்தில்
அழுகிய பழைய நம்பிக்கையின்
வாசம்
யாருக்கும் தெரியாத படி
அடித்த ரூம் ஸ்ப்ரே நறுமணத்தில்
புதுமுகம் பூணும் துரோகம்
கையசைத்துச் செல்வதாய்
காட்சிப்படுத்தும் நரித்தந்திரத்தில்
கவிதையொன்று
இங்கே
கருக் கலைப்பைச் செய்துகொள்கிறது
-ரேவா
0 கருத்துகள்:
கருத்துரையிடுக