அடர்ந்து பெருத்த கிளையில் தூளியாட்டி விடுகிறேன்
சூரியன் குடித்து வளர்ந்த சொற்களை
முன்னும் பின்னுமாயான அசைவில்
அயர்ந்த சொற்கள்
பசித்தழ
உவர்ப்பை குடித்து
நீலமாய் விரியும் பிள்ளை
அலையென கை கால் உதைத்து
கரை தீண்ட வருகையில்
கிளிஞ்சலாகிக் கிடக்கிறது
அடர்ந்து பெருத்த கிளை
- ரேவா
0 கருத்துகள்:
கருத்துரையிடுக