உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

சனி, 16 மே, 2015

தவறிய கணிப்பின் கட்டுமான விரிசல்


நம்பிக்கை இடைவெளிச் சுவற்றில்
படர்கிறது
ஓர் அவநம்பிக்கையின் கொடி

காற்றோட்ட வசதிக்காய் எழுப்பியதில்
வழிய முளைக்கிறாய்
மண் ஊட்டத்தில் விழுந்த ஒரு சொல்
ஆழ வேர்பிடித்திருப்பது அறியாது

படரக் கிடைத்த மெளனத்தின் பிடிக்கயிறு
தூண்டுதல் வார்த்தையின் பச்சையமாய்
வெளியெங்கும் படர

திரும்பிப் பார்க்கும் சாத்தியமற்று
எழுந்துவிட்ட அவநம்பிக்கையின்
பசுமைக்குப் பின்
பழுப்பு நிறத்தில் பெயரத் தொடங்குகிறது
நம்பிக்கையின் காரை

-ரேவா

யாவரும்.காம் 1-06-14


0 கருத்துகள்: