உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

சனி, 16 மே, 2015

.....



பிடிப்பற்ற பொழுதை அண்ணார்ந்து பார்க்கும்
தேவைகளின் உத்திரத்தில்
ஊஞ்சலொன்றை
மாட்டிப் பார்க்கும் விவாதத்தின்
நேர் எதிர் முனை
நெருங்கி வந்து விலகிப் போகிறது

ஆட்டிவிடும் கைகளும்
ஆட்டத்தின் நூல்பிடித்த நம்பிக்கையும்
சமநிலைக்கான காத்திருப்பில்
கரைந்திருக்க

சிக்காத வேகத்தை
வசப்படுத்த இழுக்கும் தசையசைவுகளில்
புடைக்கும் நரம்புகள்
புதுமுகம் தறிப்பதாய்

விட்ட கைகளில்
விடுபட்ட அதிர்வுகள்
உடைத்துப் போட்ட ஆணையில்
ஊஞ்சலொன்று எழுதிக்கொண்டிருக்கிறது
உத்திரத்தில்
தன் புதிய கவியை

-ரேவா

0 கருத்துகள்: