*
ஓர் இரண்டாம் முறைக்கு
இத்தனை தூரம் தேவையில்லை
எழுதிப் பழகிய நம்பிக்கையின் இருட்டில்
மாறிப் போன கையெழுத்து
குறைபட்டுக்கொள்ள தேவையுமில்லை
வேண்டுவதின் வெளிச்சம் இருளாகிப் பெருகுகையில்
வசப்பட்ட நினைவு வார்த்துத் தரும் சிறுதுளியின்
அடங்கா பசி
அழைத்துத் தரும் தனிமைக்கு
இத்தனை தூரம் தேவையில்லை
-ரேவா
0 கருத்துகள்:
கருத்துரையிடுக