கடந்து செல்வதாய் அறிவித்த நாளில்
அவசர அவசரமாய் பிய்த்தெரிகிறாய்
நமது அறையின் மயிர்க் கால்களை
வேதனைக் கண்கொண்டு முழிக்கும் அதனிடம்
தர்க்கக் கட்டுகளைச் சுமக்கச் சொல்வதில்
உனக்கொரு வருத்தமும் இருந்ததில்லை
உண்டு களித்த மேசையும்
கலந்து கிடந்த படுக்கையும்
ஆட்டம் முடிந்த விளையாட்டு களமாய் மாற
வெறிச்சோடிக் கிடக்கும் அறையில்
கசங்கிக் கிடக்கும் தனிமையை
அசைத்துப் போன காற்றில்
அசைந்தாடுகிறது
கிழக்கின் ஆணியில் நம் புகைப்படம்
-ரேவா
அவசர அவசரமாய் பிய்த்தெரிகிறாய்
நமது அறையின் மயிர்க் கால்களை
வேதனைக் கண்கொண்டு முழிக்கும் அதனிடம்
தர்க்கக் கட்டுகளைச் சுமக்கச் சொல்வதில்
உனக்கொரு வருத்தமும் இருந்ததில்லை
உண்டு களித்த மேசையும்
கலந்து கிடந்த படுக்கையும்
ஆட்டம் முடிந்த விளையாட்டு களமாய் மாற
வெறிச்சோடிக் கிடக்கும் அறையில்
கசங்கிக் கிடக்கும் தனிமையை
அசைத்துப் போன காற்றில்
அசைந்தாடுகிறது
கிழக்கின் ஆணியில் நம் புகைப்படம்
-ரேவா
0 கருத்துகள்:
கருத்துரையிடுக