பெயரில்லா இந்த உணர்வை
உரையாடல்களால் உயர எழும்பச் செய்கிறாய்
பேசாத வார்த்தைகள்
நியூரான் மரத்தில் ஆதாம் பறித்த ஆப்பிள்
ஆளுக்கொரு கடியில் புலப்பட்ட
மெளனத்தின் நிர்வாணத்தை புன்னகையெனும்
இலை ஆடை மறைக்க
இலைச்சருகுகள் உதிர்கின்ற பொழுதில்
உனக்கோர் பெயர் வைப்பேன்
விதைத் தின்றவன் என்று
***
- ரேவா
0 கருத்துகள்:
கருத்துரையிடுக