கோயில் மணிச் சப்தத்திலிருந்து
கதறிக் கொண்டிருக்கின்றன
காதுகேளா பிராத்தனைகள்
படியிறங்கி வரும் மனங்களின்
காணிக்கைக்காய் வேண்டிக்கொண்டிருக்கிற
கிழிந்த ஆடைச் சிறுமியின்
சில்லறைத் தட்டும் கோயில் மணியும்
சேர்ந்து ஒலிக்கும் நேரத்தில்
திசைக்கொன்றாய் பறந்த சப்தங்களுடன்
செவியடைத்த தெய்வங்களுக்கு
மெளனத்தை தட்டிலிட்டு
நான் கடவுள் ஆனேன்
-ரேவா
0 கருத்துகள்:
கருத்துரையிடுக