உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

சனி, 16 மே, 2015

தேங்கிக் கிடக்கும் மனதின் வார்த்தை லார்வாக்கள்


ஏங்கித் தவிப்பதாய் பெருந்தாகம்
வார்த்தை ஊற்றைக் கையள்ளிப் பருக
நாசியேறிய அவசரம்
சிதறித் தெரிக்கிற எச்சில் கோவங்கள்

தலைத்தட்டி அடங்கச் செய்யும்
ஆளுமை
நிதானத்தின் சாதிக்கு புழங்கத் தடையெழுப்ப
பெருகி வீணாகும் ஊற்று
குட்டைகளில் மெய்க்கும் லார்வாக்கள்

உட்சென்ற வார்த்தைகள்
உறிஞ்சும் ரத்தத்தில்
செரிக்க இடமற்று
பலவீனப்படும் பாதை
மீறிக் கடப்பதாய்
முன்னெச்சரிக்கைப் பாதுகாப்பு
வெறும் காலில் நடந்த அவஸ்த்தைக்கு
முற்றுப்புள்ளி

-ரேவா

(Painting Denise )


0 கருத்துகள்: