கடற்பரப்பில் தவழ்ந்து வரும் சிறு அலையென
உன் கேசம்,
கட்டுக்குள் சிக்காத தழுவலில்
அலை இழுத்துச் செல்லும் மணலென
உன் பார்வை
கடல் மணலில் நண்டெழுப்பும்
கோடென
உன் தயக்கம்
சுண்டல் சிறுவனிடம் அகப்பட்ட
சில்லறையாய்
உன் முத்தம்
இத்தனையையும் தாண்டி
கடலை ரசிக்கச்சொல்லி சிரிக்கிற
உன்னில் தான் கலந்திருக்கிறது
சிறு நதியின்
நேசம்..
-ரேவா
0 கருத்துகள்:
கருத்துரையிடுக