என் அறை முழுதும் நிரம்பிக் கிடக்கிறது
நேற்றைய இரவின் தணல் பொழுது
தணல் முழுதும்
தகிக்கும் காட்சிகள்
காட்சி அத்தனையிலும்
குட்டி குட்டியாய் படிமம்
படிமம் உடைத்து சிதறும்
உருவத் துகள்களில் பலநூறு அர்த்தம்
அர்த்தத்தின் ஆணிவேரை
அறுத்தெரிய துணிகையில்
சிக்குண்ட உருவகத்தால்
செல்லாது போன உவமைகள்
உவமைப் பொழுதுகள் வேராய் ஊன்றி
வியர்வைப் பூ வளர்க்கையில்
ஆவியாகிப் பொழிந்த மழை
அழித்துச் சென்ற தணல் பொழுதில்
தங்கிவிட்ட கரித்துண்டாய்
மிச்ச இரவுகள்
-ரேவா
0 கருத்துகள்:
கருத்துரையிடுக