வேலையேதுமில்லை என்ற போதும்
சரியான நேரம் காட்டா
கடிகார முள்ளின் தலைசுற்றலுக்கு
பயந்தே கிடக்கிற பொழுதுகளில்
அலுவல் விசயமாய் கிளம்பும்
அவசியத்தின் அவசியமற்ற
மனிதர்கள் மத்தியில்
எந்நேரமும் சுற்றிவருகிற முள்ளின்
நொடி ஜோடித்தழுவலுக்குள் பூத்துவிடுகிறது
எனக்கான நேரமும்...
0 கருத்துகள்:
கருத்துரையிடுக