உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

திங்கள், 11 மே, 2015

பிசுபிசுப்பின் ஈர எச்சங்கள்



  
மனதின் பெருஞ்சத்தம் சூழலைச் செவிடாக்க
அரூப வெளியெங்கும் அலைந்து திரிகிற
பைத்தியக் கால்வழி இறங்கிப் போகும்
மாதாந்திரத் தீட்டாய்
கண்ணீர் எச்சங்கள்

காக்கைக் கழிவு
வேர் பிடித்த மரத்தில் பழுதாய் போன
நினைவின் இருப்பிட விழுதுகள்

தவறிய கண்ணாடிச் சில்லில்
கை நரம்பறுத்து வழியும் ரத்தம்
வரைந்து பார்க்கிற பலநூறு பிம்பம்
கானல் தகிக்கும் பொழுதுகளாய்

விட்டேத்தியாய் விடப்பட்ட எழுத்தின் வழி
சுய இன்பம் காண்கிற தற்கொலைக் குறிப்பில்
கன்னித் திரை கிழியும் இக்கவிதை
ஒரு மலடாய்

-ரேவா

0 கருத்துகள்: