உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

திங்கள், 11 மே, 2015

உயிர்ச்சொல்லின் ஈரம்


பேசிப் பழகிய வார்த்தைகளோடு
களிப்புற்று உருண்டோடும் கால நதியில்
இரண்டொரு கல்லெறிந்து விளையாடுகிறாய்

சலம்பலில் வெகுண்டெழும் நீர்த் திவலையால்
நிலமெங்கும் சிதறிப் பூக்கிறது

ஓர் உயிர்ச் சொல்லின்
ஈரம்

-ரேவா

0 கருத்துகள்: