தள்ளிப்போன பின் நெருங்கி வரும்
பார்வைக்கு பயந்தே இழுத்து மூடுகிறேன்
மனச்சாளரத்தின் திரைச்சீலையை
நினைவுக் காற்று அசைத்துப்பார்த்த உள் அறையில்
ஒத்திகை சொற்களின் வெளிச்சம்
பயனற்று கிடக்கையில்
இருள் எழுந்தாடும் பழையதன் தடத்தில்
பற்றி எரிகின்ற காட்டின்
மொத்தமும் கருகி
சாம்பலாய் கிடக்கும் மெத்தையில்
சுருண்டு படுக்கும் எனக்குள் விழிக்கத் தொடங்கிய
சுடலையை கட்டிப் போடுகிறவன்
மீண்டும் என்னை மாற்றிப் போடலாம்
ஒரு விலங்காகவே
-ரேவா
0 கருத்துகள்:
கருத்துரையிடுக