உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

திங்கள், 11 மே, 2015

துரத்தும் நினைவின் தொடர்பு எல்லை



வாவென்று சொல்ல முடியா சந்திப்பிற்கான
அழைப்பைத் துண்டிக்கும்
முன்
விழுங்கிய எச்சில் விஷத்தில்
நினைவு தப்பியிருக்கலாம்

தவிர்ப்பதாய் சொல்லிய முனை
பதம் பார்த்த வார்த்தை ஈட்டியின்
கூர் பற்றி
எழுதும் பென்சில் உணர்த்த

ஒன்றன் பின் ஒன்றாய் எழுதிய
நினைவு சொற்களை
மழை திருத்தி
சுயத்தின் வெயில்
உலர விடுகையில்

புறங்கை வழியாய் ஒழுகியோடும்
சொல்லொன்றில் திறந்துகொள்கிறாய்

போவென்று சொல்லமுடியா அகாலத்தின்
இருளறைக்கு துளி வெளிச்சமாகிறது
துண்டிக்கப்பட்ட அழைப்பின்
ரத்தச் சிவப்பு

-ரேவா

(நந்தலாலா இணைய இதழ்-14-06-2014 )

0 கருத்துகள்: