எப்போதும் அவன் எனக்காக இருந்தான்
பெயர்கள் ஏதுமின்றி இருந்தாலும் கூட
இருட்டைக் கிழித்து பார்க்கத் தருகின்ற அவனிடம்
ஆதாமுக்கான அடையாளமிருந்தது
அவனதை உணராத போதும் கூட
வார்த்தைகளைத் துப்பிவிடுகின்ற
சுத்தத்திற்கான அறிகுறி
அவனிடம் இருக்கவே செய்தது
எல்லையற்று நீண்டபொழுதொன்றிலும்
எல்லைக்கதவுகளுக்கு பின்னால் நிற்குமவனிடம்
சொல்ல சில கதைகளும்
கிளைக்காரணங்களும் வளர்ந்து கொண்டேதானிருக்கிறது
ஆனாலும்
எப்போதும் அவன் எனக்காக இருந்தான்
பெயர்களேதுமின்றி இருந்தாலும் கூட..
பெயர்கள் ஏதுமின்றி இருந்தாலும் கூட
இருட்டைக் கிழித்து பார்க்கத் தருகின்ற அவனிடம்
ஆதாமுக்கான அடையாளமிருந்தது
அவனதை உணராத போதும் கூட
வார்த்தைகளைத் துப்பிவிடுகின்ற
சுத்தத்திற்கான அறிகுறி
அவனிடம் இருக்கவே செய்தது
எல்லையற்று நீண்டபொழுதொன்றிலும்
எல்லைக்கதவுகளுக்கு பின்னால் நிற்குமவனிடம்
சொல்ல சில கதைகளும்
கிளைக்காரணங்களும் வளர்ந்து கொண்டேதானிருக்கிறது
ஆனாலும்
எப்போதும் அவன் எனக்காக இருந்தான்
பெயர்களேதுமின்றி இருந்தாலும் கூட..
0 கருத்துகள்:
கருத்துரையிடுக