உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

சனி, 16 மே, 2015

சேமிப்பில் செலவான செல்லாப் பிரியங்கள்


காலத்தை இழுத்து மூடும்
மூர்க்கத்தின் இழுப்பறையைக் கொஞ்சமேனும்
திற

இடம் கொள்ளா கனவின் நரைக்கு
சாயம் பூச சந்தர்ப்பம் கொடு
இல்லை
புழுங்கிச் சாகும் அதன் கழுத்து நரம்பை
நீயே அறு

வலித்துச் சாவது தான் வாய்க்குமென்றானபின்
வந்தவன் கரத்திலே போவது
வரம்

உன் மூர்க்கத்தின் இழுப்பறையைக்
கொஞ்சமேனும்
திற

கண்ணெட்டும் தொலைவு வரை
கனவுகளைச் சேமிக்க வேண்டும்

-ரேவா


0 கருத்துகள்: