மறுக்கப்படும் அன்பிற்கு
கண்ணீரின் மீதொளிரும் வண்ணப்பூச்சோடு
வாட்டமாய் நிற்கிறது மனச்சுவரு
துயர் ஊடுருவா வண்ணம்
வெயில் மழைக்கு தாங்குவதாய் எழுப்பி வைத்தாலும்
இட்ட நிறம் சரியில்லையென்ற
எட்டுக்கட்டல்களுக்கு மத்தியில்
எங்கிருந்தோ ஊடுருவும் பார்வை மின்னலில்
விரிசல் ஒன்று விழுந்திருந்தது
நானறியாமல்...
-ரேவா
0 கருத்துகள்:
கருத்துரையிடுக