எப்போது வந்தாலும் தப்பாதோர் இதழ்முத்தம்
இட்டுவிடுகையில் இனித்திருந்தாய்
இப்போதும் உற்சாகம் உள்ளத்தில் கிடந்தாட
உடைபட்ட முதுகெலும்பின் நினைவெழுந்து கிளர்ந்தாட
தடம் தந்த நினைவின் ரசமெடுத்து பூசிக்கொள்கிறது
புள்ளிமழையில் பூத்திருந்த
அலுவலகஅறைக்கண்ணாடி..
-ரேவா
0 கருத்துகள்:
கருத்துரையிடுக