காற்று கிழித்த ஜன்னல் திரைவழியே
கசிந்து கொண்டிருக்கிறது வெளிச்சத்தின் கீற்று
ஜன்னலை கடக்கும் எதுவொன்றையும்
பெரிதாய் வேடமிட்டுக் காட்டும் அதன்
குணத்திற்காகவே மறுதலிக்கிறேன்
ஆனாலும்
வெளிச்சத்திரை விலகுவதாயில்லை
ஜன்னல் கம்பியில் வந்தமர்ந்து
வாசல் வரை தன்னை வரைந்துவிட்ட சாதுர்யத்தை
எண்ணி எண்ணி திளைக்கையில்
இருட்டு வந்து அப்பியிருந்தது
எனதறையை....
-ரேவா
0 கருத்துகள்:
கருத்துரையிடுக