முடிந்த வருடத்தின் நாட்காட்டியில்
பாலையின் சாயல் தெரிகிறது
பரணில் எறிந்த பழையதின் ஒரு தேதியில்
காதலால் எழுதப்பட்டிருக்கும்
உன் குறிப்பு
படபடக்கும் புதிய காலண்டரை
கலைத்து கதைப் பேசும் காற்றுக்குத் தெரிந்திருக்கும்
நம் வாழ்க்கை
உன்னைச் சேரும் எதிர்பார்ப்பின்
வைகறையில்
கிழிக்கப்படும் தேதியோடு தொடங்குகிறது
நம்மை நெருங்குவதற்கான
என் நாட்கள்
-ரேவா
0 கருத்துகள்:
கருத்துரையிடுக