வார்த்தை நதி வற்றிவிட்டிருந்த இடத்தில்
கண்டெடுத்த கூழாங்கற்களைப் போலிருக்கிறது
மெளனம்
கையிலெடுத்துக்கொள்கையில்
நதி இருப்பதைப் போன்ற கானல்
நாலாபுறமும் என்னை நிரப்ப
நினைவின் துடுப்பசைத்து கரையேறுகையில்
என் கையில் நதி இருந்தது
கூழாங்கற்களை சுமந்தபடி
நன்றி : நம் தோழி
0 கருத்துகள்:
கருத்துரையிடுக