உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

திங்கள், 11 மே, 2015

அரவங்களுக்கு இடமற்ற தோட்டத்தின் ஆப்பிள்




வலிக்க அடித்த பின்னும்
திரும்பிப் பார்க்க முடிகிற காயங்களில்
இன்னும் இருக்கிறான்
ஓர் ஆதிகால ஆதாம் ஏவாளின் கரம் பற்றி

ஆழப் புதைந்த நிராகரிப்புக்கு பிறகும்
ஏதேன் தோட்டத்து ஆப்பிளை
பறித்துத் தரக்கேட்கிற அவள் கண்களில்
மொழியின் நிர்வாணம் பழமென குழைந்திட
உண்ணத் தருமவன் பாவனையின் தோளுக்கு பின்
அருவருப்பாய் அரவங்கள்

விஷம் கூடி இருளச் செய்கிற இருப்பின் தடம் கீறி
வழியுமந்த ரத்தச் சிவப்பில் மீண்டு எழுகிறது
அரவங்களுக்கு இடமற்ற ஓர் ஆப்பிள் தோட்டம்

-ரேவா

0 கருத்துகள்: