உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

திங்கள், 11 மே, 2015

நகர்தலின் நங்கூரம்




தீர்ந்து போன இறுதிச் சொட்டிலிருந்து
ஆரம்பிக்கிறாய்
தாகத்திற்கான வேட்கையை

உதறிச் சுருட்டிய காரணப் பாயில்
நீட்டிக் கொண்டிருக்கும் பிசிரை
இழுத்துப் பிடித்திருக்கும் பிரியத்தால்
நங்கூரமாக்கி நகர்கிறாய்

எல்லைப் பகுதியெங்கும் முளைத்துவிட்ட வனம்
நெடுந்தீவை வளர்த்தெடுக்க
துரோகத்தின் வேற்று ஆட்களின் நடமாட்டம்
அச்சுறுத்தலாய்

காத்திருத்தலெனும்
கடல் தான்

நீ
தீர்த்து போன இறுதிச் சொட்டிலிருந்து
ஆரம்பிக்கிறாய்
உன் தாகத்திற்கான வேட்கையை

-ரேவா

0 கருத்துகள்: