உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

திங்கள், 11 மே, 2015

குறியீடுகளின் ஒழுங்கற்ற விதி




நினைத்துக் கொண்டிருப்பதே பெரும் ஆறுதலென்ற
மனப் போராட்டதில் அடித்துத் திருத்துகிறாய்
அத்தனைக் கணக்கையும்

தவற விட்ட கூட்டல்களை
மீறிப் போன கழித்தல்களால்
எடுத்து வைத்தப் பெருக்கல்களில்
வகுத்தெடுத்து கையில் கொடுக்கிறாய்

மீதியின் புள்ளியில் ஈவின்றி
அமர்ந்து கொள்கிற தனிமையின்
இருப்புக்கும் இருண்மைக்கும் இடையே
கற்றுக் கொடுக்கிறாய்
புதிய விதியில்
பழைய விதிமுறையை

குறைவான அவகாசத்தில்
கற்றுத் தேறுதல் முடியாதெனினும்
நினைத்துக் கொண்டிருப்பதே பெரும் ஆறுதலென்ற
மனப் போராட்டதில் அடித்துத் திருத்துகிறேன்
அத்தனைக் கணக்கையும்

-ரேவா

(ஓவியம் : நன்றி fatma abdullah lootah )

0 கருத்துகள்: